தமிழ்நாடு

சென்னை : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
சென்னை அருகே மனைவியை குத்திக் கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் கிட்டப்பன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சுமதி, தனது குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இன்று காலை தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவரை சந்திக்க வந்துள்ளார் சுமதி. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் அடித்துள்ளார் கிட்டப்பன். மயங்கி விழுந்த அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கிட்டப்பன், பின்னர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். சுமதியின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் கிட்டப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்