தமிழ்நாடு

Chennai | காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்... சென்னை அசோக் நகரில் திக்திக்

தந்தி டிவி

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்... சென்னை அசோக் நகரில் திக்திக்

சென்னை அசோக் நகர் பகுதியில் மதுபோதையில் மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசோக் நகர் புதூர் 13-வது தெருவை சேர்ந்தவர் வித்யபாரதி. இவரும் பிரவீன்குமாரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 8 மற்றும் 4 வயதில் மகனும், மகளும் உள்ளனர்.

ஜெனரேட்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வரும் பிரவீன் குமார், மது போதையில் மனைவி வித்யபாரதி உடன் சண்டையிட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று ஏற்பட்ட கைகலப்பில் பிரவீன், வித்யபாரதியை அடித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது..

வித்யபாரதி கீழே விழுந்து மயங்கியதை பார்த்த பிள்ளைகள் கதறி அழுத சூழலில், அக்கம்பக்கத்தினர் வித்யபாரதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, மனைவியை அடித்துக் கொலை செய்ததாக பிரவீனை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்