தமிழ்நாடு

மட்டன் குழம்பு கேட்டு ரகளை செய்த காவலர்கள்... வாடிக்கையாளரை தாக்கி அராஜகம்... வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி
• சென்னை திருவொற்றியூரில், உணவகத்தில் ரகளையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். • திருவொற்றியூர் தேரடி பகுதியில் இயங்கி வரும் அசைவ உணவகத்தில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்கள், உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். • காவலர்கள் மட்டன் குழம்பு கேட்க, அங்கு பணிபுரியும் ஊழியர் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார். • அப்போது, கடை ஊழியரை மிரட்டியதுடன், 5 காவலர்கள் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். • மேலும், வாடிக்கையாளர் ஒருவரையும் காவலர்கள் தாக்கியுள்ளனர். • இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து, திருவெற்றியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. • அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ரகளையில் ஈடுபட்ட முதல் நிலைக் காவலர்கள் தனசேகர் மற்றும் கோட்டமுத்து ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்