தமிழ்நாடு

அயனாவரம் சிறுமி வழக்கு : சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தந்தி டிவி
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமியை மிரட்டி, ஏழு மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுள்14 பேர், வழக்கை சிபிஐ க்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற எந்த காரணமும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக அயனாவரம் மகளிர் காவல் நிலையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 300 பக்க குற்றப்பத்திரிக்கை நகல்கள், கைதான17 பேருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்