ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜா உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் ஆஜரான கோகுல் தரப்பு வழக்கறிஞர், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.