தமிழ்நாடு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வியாழன் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என கிறிஸ்தவ மக்கள் களம் என்கிற அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்பதால், அந்த பள்ளிகளுடன் இணைந்திருக்கும் தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பணியிலும், ஆசிரியர் பணியிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் புனித வியாழன் வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்