தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கேமரா பொருத்த ரூ.97 கோடி செலவு

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்து 232 நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அரசிடமிருந்து நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்புதல் பெறப்பட்டவுடன் இந்த கடைகளிலும் 20 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், பெண்கள் சுய உதவிக்குழுக்கள், மீனவர் சங்கங்கள், நடமாடும் ரேஷன் கடைகள் என மொத்தம் 35 ஆயிரத்து 232 ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த 97 கோடி ரூபாய் செலவாகும் என இது சம்பந்தமாக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை 28 ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்