தமிழ்நாடு

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு : கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு, கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கனிமொழியின் வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், வேட்புமனு பரிசீலனையின் போது ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் குற்றம்சாட்டி உள்ளார். கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும், அவர்களின் வருமான விவரங்கள் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவு சான்றிதழை இணைத்திருக்க வேண்டும், ஆனால் அவர் இணைக்கவில்லை எனவும், அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது எனவும் தமிழிசை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கியதாகவும் தமிழிசை மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், மனுவுக்கு பதிலளிக்கும்படி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்