திருமழிசை தற்காலிக சந்தைக்கு வரும் வியாபாரிகளை பரிசோதித்து அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஜெயசீலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், திருமழிசை தற்காலிக அங்காடியில் கொரோனா தொற்று தடுப்புக்காக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினர். அது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை மே 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.