தமிழ்நாடு

நடிகர் சங்க தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடரலாம் - சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது என நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணம் ராமசாமி அமர்வு, நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடரலாம் என அனுமதி அளித்துள்ளது. இருப்பினும உயர் நீதிமன்ற ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது என தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்