தமிழ்நாடு

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்களை துன்புறுத்த கூடாது என உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக ஏற்கனவே காவல் துறை அதிகாரிகளுக்கு, டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையின் நகல் அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா