தமிழ்நாடு

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் - சென்னை உயர் நீதிமன்றம்

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் என்ற தமிழக அரசின் 2010ம் ஆண்டு அறிவிப்பாணை செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி முழு பெண் நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC