தமிழ்நாடு

"செப்டம்பர் 4-ல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" - சுகாதார செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சுகாதாரத்துறை செயலர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள், கடந்த ஆண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 118 மருத்துவர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவர்களை தொலைதூர

மாவட்டங்களுக்கு இட மாறுதல் செய்தும், சாதாரண பதவியில் பணியமர்த்தியும் பழிவாங்கக்கூடாது என்று உத்தரவிட்டது. இதை பின்பற்றி பழைய இடத்துக்கு தன்னை மாற்றிய அரசு, ஜூனியர்களுடன் சேர்ந்து

பணிபுரியும் வகையில் நியமனம் செய்துள்ளதாக மூத்த மயக்கவியல் நிபுணர் செய்யது தாஹிர் ஹூசைன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக வரும் செப்டம்பர் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு