சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே அரசு பேருந்து போதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் மைலாப்பூர் பகுதியை சேர்ந்த சாந்தி என தெரிய வந்தது. இதுகுறித்து பெசன்ட் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.