சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவர்களுக்கு 15 ரூபாயாகவும், பெரியவர்களுக்கு 50 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்காவில் வரக்கூடிய வருமானம் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு, போதுமானதாக இல்லை என்பதால், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கிண்டி சிறுவர் பூங்காவில் 50 லட்ச ரூபாய் செலவில் புலி, பெங்குயின், கங்காரு, வெள்ளை பாண்டா, அனகோண்டா, டைனோசர் உள்ளிட்ட மிருகங்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.