தமிழ்நாடு

சென்னையில் சுமார் 120 கோடி பாக்கி...வட்டாட்சியருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்...

தந்தி டிவி

சென்னையில் கால்ப் மைதானத்திற்கு குத்தகை பாக்கியாக, சுமார் 120 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற வட்டாட்சியரின் நோட்டீசை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மாம்பலத்தில் இருந்து கிண்டி செல்லும் வழியில் உள்ள கால்ப் மைதானத்திற்கு 1971லிருந்து 1996ஆம் ஆண்டு வரை குத்தகை செலுத்தவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து, குத்தகை பணமாக சுமார் 120 கோடி ரூபாயை செலுத்த வேண்டுமென மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் கடந்த 2004ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதுதொடர்பாக, காஸ்மோபாலிட்டன் கிளப் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், மாவட்ட ஆட்சியருக்கோ, வட்டாட்சியருக்கோ நோட்டீஸ் அனுப்ப அதிகாரம் இல்லை எனக் கூறி, வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Breaking | DMK | Congress | CM ஸ்டாலின் முன்னிலையில்.. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

Breaking | Congress | DMK Alliance | திமுக கூட்டணியில் காங்.க்கு எத்தனை சீட்? | கசியும் தகவல்கள்