சென்னை அடுத்த செங்குன்றம் அருகே வாடகை வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோகன் என்பவரது வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த இளையகுமார், புளியந்தோப்பு புரோஸ்கான், அஜித்குமார் ஆகியோர் வாடகைக்கு எடுத்து, 5 கிராம் அளவில், பாலித்தீன் பைகளில் அடைத்து, முக்கிய இடங்களில் கஞ்சா விற்று வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், பாக்கெட் செய்யும் பணியில் இருந்த மூவரையும் கைது செய்ததோடு, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.