தமிழகத்தில் இந்த மாதம் இறுதிவரை தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்கான ரேஷன் பொருள் மற்றும் அரசின் இலவச முக கவசங்களை பெற, வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகளில், நியாய விலைக் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைதாரர்கள் என ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் டோக்கனை விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பொருள் வழங்கப்படாது என ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.