சென்னையில் 300-க்கும் மேற்பட்டோரிடம் வாங்கிய ஏலசீட்டு பணத்துடன் தலைமறைவாகிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் அரிசிக்கடை நடத்தி வந்த கண்ணன் என்பவர் கடந்த 15 வருடங்களாக அப்பகுதியில் ஏலசீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பணம் கொடுப்பதில் காலம் தாழ்த்தி வந்த கண்ணன் திடீரென 300-க்கும் மேற்பட்டவர்களின் பணத்துடன் தலைமறைவானார். இதனிடையே ஏலசீட்டு ஆவணங்களை கொண்டு, கண்ணன் கடன் வாங்கியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியை அளித்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கண்ணனின் உறவினர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.