தமிழ்நாடு

சென்னை வாசிகளை கவரும் ரயில் உணவகம்

சென்னைவாசிகளை கவரும் வகையில் ரயில் பெட்டி போன்ற வடிவமைப்பில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

தந்தி டிவி

சென்னை ஐ.சி.எப். ரயில் அருங்காட்சியகத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் செயல்படுகிறது ரயில் உணவகம்..

பார்ப்பதற்கு ரயில் போன்ற தோற்றத்துடன், முழுவதும் ஏசி வசதியுடன் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது இந்த உணவகம். இந்திய சுற்றுலா மற்றும் உணவுக்கழகம் நடத்தி வரும் இந்த உணவகம் இந்தியாவின் 2 வது ரயில் உணவகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது...

ஒரே நேரத்தில் 64 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்... உணவகத்தின் உள்ளே நவீன வசதிகளும் இருப்பதால் சிறப்பான அனுபவம் கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்..

வாரத்தில் திங்கட்கிழமையை தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது இந்த உணவகம்... அனைத்து வகையான உணவு வகைகளும் இங்கு குறைவான விலையில் ருசியாக கிடைப்பதாகவும் கூறுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.

ரயில்வே ஊழியர்களுக்கு 15% தள்ளுபடி விலையில் உணவு வழங்கப்படுகிறதாம்.. புது வித அனுபவம் தேடுவோர் ரயில் உணவகத்துக்கு ஒரு முறை சென்று வர நிச்சயம் விரும்புவார்கள்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி