தமிழ்நாடு

சென்னை : சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் தயாரிக்க குழு உருவாக்கம்

சென்னை மாவட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை மாவட்டத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை முறையாக கையாள்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அளவிலான குழுவை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்குவதற்கும் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், மாவட்ட சுகாதார ஆய்வாளர், மீன்வளத் துறை துணை இயக்குனர் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழு இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்