தமிழ்நாடு

கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்த இளைஞர்கள் : இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார்

சென்னை எண்ணூரில், கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களை கத்தியால் குத்திவிட்டு செல்போன், மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தந்தி டிவி

சென்னை எண்ணூர் துறைமுகம் பகுதியில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு, தினேஷ் என்ற வடமாநில லாரி ஓட்டுனர், ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், கத்தியால் தினேஷின் காலில் குத்திவிட்டு செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

வலியால் துடித்த தினேஷ், அந்த வழியாக வந்த ரோந்து காவலரிடம் புகார் அளித்தார். இந்த இடைவெளியில், இதே பாணியில் முருகேசன் என்ற மற்றொரு ஓட்டுனரையும் கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த செல்போனையும் கொள்ளையர்கள் பறித்துள்ளனர்.

இதையடுத்து தப்பியோட முயன்ற இரண்டு இளைஞர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மதன் மற்றும் ராம்குமார் என்பது தெரியவந்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு