தமிழ்நாடு

சென்னையை சேர்ந்த பொறியாளர் வெளிநாட்டில் மர்ம மரணம்

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த பிரபு என்ற கட்டிட பொறியாளர், அங்கோலா நாட்டில் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த பிரபு என்ற கட்டிட பொறியாளர், அங்கோலா நாட்டில் உயிரிழந்துள்ளார். அங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓராண்டாக பணிபுரிந்து வந்த அவர், கடந்த செவ்வாயன்று உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து, பிரபு குடும்பத்தினர் கேட்டபோது, பிரேத பரிசோதனை அறிக்கையை அனுப்பியதோடு, உடலை அங்கேயே அடக்கம் செய்வதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ள பிரபுவின் மனைவி திவ்யா, தனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மூன்றரை வயது மகனுடன் தான் ஆதரவின்றி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Bharat Petroleum | LPG | "இவர்களுக்கு முன்னுரிமை" - பாரத் பெட்ரோலியம் அதிரடி

ADMK | Edappadi Palanisamy | நாடே நெருக்கடியில் இருக்கும் நிலையில் களத்தில் குதித்த ஈபிஎஸ்

LPG Cylinder | Ariyalur | அரியலூர் LOCK - சிலிண்டர் சப்ளை STOP

Actor Dileep Case | விடுதலையான நடிகர் திலீப்க்கு மீண்டும் அதிர்ச்சி

Gas Cylinder Shortage| சென்னை ஹோட்டல்கள் வெளியே வைக்கப்பட்ட போர்டுகள் - பேச்சிலர்களுக்கு பேரிடி