தமிழ்நாடு

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் - முதல் தகவல் அறிக்கை

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

ரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, காவலர் ராஜவேலுவை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஆனந்தனும் அவனது கூட்டாளிகளும், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும், மயிலாப்பூர் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா அங்கு சென்று கண்காணித்துள்ளனர்.

மாலை மூன்று மணி அளவில், காவல் உதவி ஆணையர் சுதர்சனும், இளையராஜாவும் அந்த விடுதிக்குள் சென்று சோதனை செய்த போது, விடுதியின் முதல் தளத்தில் ஆனந்தனின் கூட்டாளிகள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் படி, தரைதளத்தில் இருந்த அறை ஒன்றில், கட்டிலுக்கு கீழ் பதுங்கியிருந்த ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், காவலர் ராஜவேலுவிடம் பறித்துச் சென்ற வாக்கி டாக்கியை தரமணி இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே வைத்துள்ளதாக ஆனந்தன் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது, வாக்கி டாக்கி இருக்கும் இடத்தை சொல்லாமல், ஆனந்தன் அலைகழித்துள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் சிபிடி காம்பவுண்ட் பகுதியில், வாக்கி டாக்கியை எடுப்பதாகக் கூறி மரப்பொந்திற்குள் கைவிட்ட ஆனந்தன், உள்ளே இருந்த பட்டாக்கத்தியைக் எடுத்து, உதவி ஆய்வாளர் இளையராஜாவை வெட்ட முற்பட்டுள்ளான். இதனால் அவரது கையில் வெட்டுக் காயம் பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் ஆனந்தன் கத்தியை கீழே போடாததால், தற்காப்புக்காக, உதவி ஆணையர் சுதர்சன் தனது துப்பாக்கியால் ஆனந்தனை சுட்டுள்ளார்.

இதில் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், ஆனந்தன் கீழே விழுந்ததாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு