சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, மருத்துவமனை வளாகத்தில் உள்ள 75 மரங்களை வெட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீபதிகள், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததுடன், டிசம்பர் 2ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி எழும்பூர் கண் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டனர்.