தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் இருக்கும் 36 பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, மக்களுக்கு வெளிபடுத்தும் வண்ணம் "பழங்குடி நாதம்" என்னும் கலை இசை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் அவர்களின் பாரம்பரிய இசைகள் முழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,000 பழங்குடியின மக்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.