கொடுங்கையூர் பகுதியில் 33 வயதான பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, குழந்தைகளின் கழுத்தில் பிளேடு வைத்து மிரட்டி, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. பெண் கூச்சலிட்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார், ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி பரத் என்பவரை கைது செய்தனர். பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பரத், அந்த பெண்ணுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்ததாகவும், திருமணத்திற்கு பின்னர் அந்த பெண் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்து மிரட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.