தமிழ்நாடு

Chennai | Crime | சென்னையில் பைக்கை மாயமாக்கும் பள்ளி மாணவர்கள் -ஏன் இப்படி செய்தார்கள்? ஷாக் காரணம்

சென்னையில் பைக்கை மாயமாக்கும் பள்ளி மாணவர்கள் -ஏன் இப்படி செய்தார்கள்? ஷாக் காரணம்

thanthitv

சென்னையில் கண்ணில் படும் பைக்கையெல்லாம் மாயமாக்கும் பள்ளி மாணவர்கள் - ஏன் இப்படி செய்தார்கள்? ஷாக் காரணம் சென்னை சூளைமேட்டில் இருசக்கர வாகனங்களை திருடிய அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் போலீசில் சிக்கினர். சென்னை சூளைமேட்டில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 12 முதல் 14 வயதுக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் பிடிபட்டுள்ளனர். சென்னை சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிக் கொண்டிருந்த போது, ரோந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பைக்குகளை திருடி, பெட்ரோல் இருக்கும் வரை ஊர் சுற்றிவிட்டு, பின்னர் மறைவிடத்தில் விட்டு விட்டு அவர்கள் வேறு வாகனம் திருடுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களின் தகவலின் பேரில் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டவர்கள் சிறார்கள் என்பதால், பெற்றோரை அழைத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்