தமிழ்நாடு

கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து கொள்ளை - 5 ஆண்டுகளுக்கும் மேலாக இது தான் தொழில் என வாக்குமூலம்

சென்னையில் பொது இடங்களில் தனிமையில் இருக்கும் கள்ளக்காதல் ஜோடிகளிடம் போலீஸ் என கூறி மிரட்டி பணம், நகைகளை பறித்துச் சென்ற கில்லாடி ஆசாமி நிஜ போலீசிடம் சிக்கிய கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தந்தி டிவி

சென்னையை அடுத்த மணலியை சேர்ந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மைதானம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். ஆனால் இவர்கள் 2 பேருக்குமே ஏற்கனவே திருமணமாகி இப்போது முறையற்ற உறவில் இருந்துள்ளனர். தனிமையில் இவர்கள் 2 பேரும் இருப்பதை அறிந்த நபர் ஒருவர் அங்கே வந்து தன்னை போலீஸ் என கூறியுள்ளார். பார்ப்பதற்கு டிப் டாப் ஆக இருந்த அந்த நபரை பார்த்ததும் பயந்து போனது அந்த ஜோடி. அவர்களின் செய்கையே கள்ளக்காதல் ஜோடிகள் என்பதை காட்டிக் கொடுக்க, இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அந்த நபர். நீங்கள் கள்ளக்காதல் ஜோடிகள் என்பதை இரு குடும்பத்திலும் சொல்லிவிடுவேன் என கூறி மிரட்டியதோடு, காதலன் முன்பே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் இவற்றை பறித்துச் சென்றுள்ளார். தனக்கு நடந்ததை பற்றி மணலி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்த போது தான், போலியான போலீசால் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் செல்போன் நம்பரை வைத்து சோதனை செய்த போது மாதவரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு டிப் டாப் ஆக சுற்றி வந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்படவே, அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமி பிச்சைமணி என்பது தெரியவந்தது. தண்டையார்பேட்டையை சேர்ந்த இவர், ஏராளமான டேங்கர் லாரிகளின் உரிமையாளர் என்பதும், அதில் இருந்து வரும் வருமானம் உல்லாச வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லாததால் நூதன கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அத்தனை உண்மைகளும் தெரியவந்தது. இவரின் முழு நேர வேலையே தனிமையில் இருக்கும் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து கொள்ளையடிப்பது தானாம்... டிப் டாப் ஆக இருக்கும் தன் தோற்றமே அதற்கு கை கொடுக்க, தன்னை போலீஸ் என கூறிக் கொண்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக இதையே தொழிலாக வைத்துள்ளார். பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தனிமையில் அத்துமீறும் கள்ளக்காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிப்பது மட்டுமின்றி, பெண்களை பலாத்காரம் செய்வதும் இவரின் வழக்கமாம்... இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இவரிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் கள்ளக்காதல் விவகாரம் என்பதால் இதை யாரும் வெளியே சொல்ல முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. கைதான இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாகவே இதுபோன்ற வழக்கில் கைதாகி வெளியே வந்தவர் மீண்டும் தன் சேட்டையை ஆரம்பித்து இப்போது வசமாக சிக்கியிருக்கிறார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு