கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால், இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் கவனக்குறைவாக இருக்கக் கூடாது எனவும் நாட்டிலேயே தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றும் கூறினார். முன்னதாக, நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட உள்ள எஸ்டிஆர்எப் குழுவுக்கு, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சில ஆலோசனைகள் வழங்கினார்.