சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து விசாரிக்க தேசிய பேரிடர் மேலாண்மை கூடுதல் செயலர் திருப்புகழ் தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷுடன் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.