தமிழ்நாடு

சென்னையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ

சென்னையில் தனியார் மருத்துவமனையில் 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடந்த மூன்றாம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு, கொரோனோ உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் மருத்துவரின் தந்தைக்கு ஏற்கனவே கடந்த நான்காம் தேதி கொரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீடு மற்றும் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனையில், சென்னை மாநகராட்சி சார்பில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி அடித்து வருகின்றனர். மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கவும், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா