சென்னையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை, கொரோனா தொற்றுக்கு, ஆயுதப்படை காவலர் உட்பட 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆயுதப்படை காவலர், ராயப்பேட்டை சேர்ந்த முதியவர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.