சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான நிலவரத்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.