தமிழ்நாடு

முதலீட்டாளர்கள் மாநாடு - நீதிபதிகள் கேள்வி

கடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* சென்னையில் புதன்கிழமை சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க ஆயிரத்து 600 நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

* இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் குற்றப் பின்னணி ஆராய வேண்டும், அவ்வாறு இருப்பின் அவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

* இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாரயணா மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

* அப்போது, கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் மூலம், 68 நிறுவனங்கள் மூலம், 2 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும்,

* நடைபெறவுள்ள மாநாடு மூலம் 2 புள்ளி 55 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.

* இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படாத நிலையில், முதலீட்டாளர்களுக்கு தேவையான நிலங்களை எப்படி ஒதுக்குவீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக