சென்னை மாநகரில், 'ரூட் தல' என்ற பெயரில், கல்லூரி மாணவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்டும் வகையில், மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். , "ரூட் தல" என மாணவர்கள் யாரேனும் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், போலீசுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
இதன்படி, 90875 52233 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
www.facebook.com/chennai.police - என்ற முகநூல் பக்கம் மூலம்,
www.twitter.com/chennaipolice_ - என்ற டுவிட்டர் வலைதளம் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு, சென்னை மாநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.