சென்னையில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது . அண்ணா நகரில் உள்ள டவர் பார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கண்டு களித்தார்.
துடும்பிசை, கூத்து நிகழ்ச்சி, மல்லர் கம்பம், கை சிலம்பாட்டம், திருப்பத்தூரான் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி, நெல்லை அமுதாவின் வில்லிசை நிகழ்ச்சி, மாற்துத்திறனாளி கலைஞர்களின் மல்லர் கம்ப நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கண்டு ரசித்தனர்.