தமிழ்நாடு

பெண்ணிடம் திருமண தோஷம் நீக்குவதாக கூறி கைவரிசை

சென்னை குரோம்பேட்டை ராதா நகரில் வசித்துவரும் பெண்ணிடம் ம‌ர்ம நபர் ஒருவர் நூதன முறையில் செயினை பறித்து சென்றுள்ளார்.

தந்தி டிவி
சென்னை குரோம்பேட்டை ராதா நகரில் வசித்துவரும் பெண்ணிடம் ம‌ர்ம நபர் ஒருவர் நூதன முறையில் செயினை பறித்து சென்றுள்ளார். சமையல் வேலை செய்துவரும் பார்த்தசாரதி என்ற பெண், 38 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்து வந்த‌தால், தோஷம் நீக்குவதற்காக சாமியார் ஒருவரை அனுகியுள்ளார். அதன் படி தடை நீங்க பூஜைசெய்ய வேண்டும் என கூறிய ம‌ர்ம நபர் தங்க சங்கிலியை கழற்றி சுவாமி படத்தில் அணிவிக்குமாறு கூறியுள்ளார். அதனை நம்பி பார்த்தசாரதி செயினை கழட்டிய போது, ம‌ர்ம நபர் செயினை திருடி விட்டு தப்பிசென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிட்லபாக்கம் போலீசார், சில்வர் சீனிவாசன் என்ற பிரபல கொள்ளையனை தேடி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்