Chennai | Child | மதிய உணவு சாப்பிட்டு தூங்கிய 2 வயது குழந்தை - அதிர்ச்சியில் உறைந்த தாய் #chennai #child #thanthitv சென்னையில் சோகம் - மதிய உணவு கொடுத்து தூங்க வைத்த 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு சென்னை கொடுங்கையூரில், மதிய உணவு கொடுத்து தூங்க வைத்த இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கஷியா, தனது இரண்டு வயது மகள் அதியா பாத்திமாவுடன் வசித்து வந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாகக் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் மகளுக்கு உணவு கொடுத்து தூங்க வைத்துவிட்டு கஷியா வீட்டு வேலைகளைக் கவனித்துள்ளார். மாலையில் குழந்தையை எழுப்ப முயன்றபோது, குழந்தை சுயநினைவின்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.