தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி, பதவியை ராஜினாமா செய்தார்.

தந்தி டிவி

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தஹில் ராமனி, கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கொலீஜியத்திற்கு தஹில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்கப்படாததை அடுத்து, அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமானி, பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தக் கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். வரும் 2020- ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி தஹில் ரமானி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்