புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் சந்திப்பில் நடைமேடை கட்டணத்தை 15 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், ஜீன் 30 ஆம் தேதி வரை இந்த கட்டணம் அமலில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக இரண்டு நடைமேடை சீட்டு வழங்கும் பகுதி நடைமேடை ஒன்றுக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் ஐந்தாவது நுழைவு வாயில் அருகே அமைக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் நடமாட்டத்திற்கு உள்ள இடையூறை களையவும் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.