தமிழ்நாடு

காரை ஓட்ட உறவினர் கொடுக்காததால் ஆத்திரம் - காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்

உறவினர் காரை ஓட்ட தராத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் காரை தீ வைத்து எரித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்தவர் வருபவர் டோமினிக். இவரது மகன் டார்வின். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஹூண்டாய் ஐ 20 காரை வாங்கியுள்ளார். இந்த காரை பார்த்ததும் டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்வீஸ் அதில் ஏற விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் டார்வினோ தன் உறவினரான ஜர்வீஸை காரில் ஏறவும் ஓட்டவும் அனுமதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கார் கண்ணாடியை அப்போதே அடித்து உடைத்துள்ளார் ஜர்வீஸ். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஜர்வீஸ், டார்வினின் கார் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் ஜர்வீஸை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்