தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை : 3 பேர் கைது, 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

சென்னை தரமணியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை தரமணி பகுதியில் ஐஐடி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த அரவிந்த் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவனை கைது செய்த போலீசார், அவன் அளித்த தகவலின் பேரில், கமலக்கண்ணன், லிண்டன் டோனி, ஆகிய இருவரை கைது செய்து, 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்