இளைஞர்களுக்கான பைக் ரேஸில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது மிக்கேல் என்ற 14 வயது சிறுவன் கலக்கி வருகிறான்.
இந்தியா முழுவதும் உள்ள 21 வயதுக்கு உட்பட்டோர் பங்குபெறும் பைக் ரேஸில் 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை அவர் வென்றுள்ளார். தான் பங்கேற்ற இந்திய அளவிலான 10 போட்டியில், 8-ல் முதலிடம் வந்து அசத்தியுள்ளார். சாலைகளில் அதிகவேகமாக செல்வது தனக்கு பிடிக்காது என்றும் அதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மிக்கேல் கூறியுள்ளார். சர்வதேச அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுவதே தனது இலக்கு என்றும், முகமது மிக்கேல் தெரிவித்துள்ளார்.