'நான் ஒரு புத்தக காதலன், ஒவ்வொரு நூலும் அற்புதமாக தோன்றுகிறது' என உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை எழுதிய எழுத்தாளர் மக்சிம் கார்கி சொல்வார்.
அத்தகை அற்புதமான புத்தக பொக்கிஷத்தை வாசகர்கள், சென்னை கண்காட்சியில் தேடி அலைகின்றனர்.
அவர்கள் அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களை எழுத்தாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சு.வெங்கடேசன், எழுத்தாளர்
புரட்சிகரமான பாடல்களாலும், அற்புதமான கவிதைகளாலும் எல்லோர் மனதிலும், நீக்கமற நிறைந்திருக்கும், உலகம் போற்றும் மகாகவி பாரதியார் கவிதைகள் உள்பட சில நூல்களை பரிந்துரைக்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.
லேனா தமிழ்வாணன், எழுத்தாளர்
பரந்து விரிந்து கிடக்கும் உலகில் பல்துறை அறிவுபெற பாடப்புத்தகங்கள் மட்டும் பயன்தராது என்பதால், ஒவ்வொரு வரும் நேரம் ஒதுக்கி வாசிப்பு பழக்கத்தை அவசியமாக்க வேண்டும் என்பதே கற்றறிந்த பெரியோர்களின் முத்தாய்ப்பான கருத்தாகும்