சென்னை புத்தக கண்காட்சியில், தமிழக அரசின் பாடநூல் கழக அரங்கு இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது அரசு போட்டி தேர்வுகளை எழுத இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பள்ளி பாடப்புத்தங்களை வாங்கிச்செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் நான்கு லட்சம் ரூபாய் வரை பாடப்புத்தகங்கள் விற்பனையாகின்றன என்று பாடநூல் கழக உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார். 21ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுவதால், அதற்குள் மேலும் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனை நடக்கும் என அவர் கூறியுள்ளார்.