தமிழ்நாடு

Chennai | Bike Fire | மேம்பாலத்தில் திடீரென மளமளவென பற்றி எரிந்த பைக் - சென்னையில் பரபரப்பு

மேம்பாலத்தில் திடீரென மளமளவென பற்றி எரிந்த பைக் - சென்னையில் பரபரப்பு

thanthitv

Chennai | Bike Fire | மேம்பாலத்தில் திடீரென மளமளவென பற்றி எரிந்த பைக் - சென்னையில் பரபரப்பு மேம்பாலத்தில் விழுந்த கேடிஎம் பைக் தீப்பிடித்து எரிந்து சேதம் சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில், விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது... மாதவரத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் தனது கேடிஎம் பைக்கில் சென்றபோது, மேம்பாலத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால், கசிவு ஏற்பட்டு வண்டி திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தீபக் உயிர் தப்பிய நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீசார் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வண்டி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. விபத்து குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்