தமிழ்நாடு

பெசன்ட் நகர் பீச்சில் கானா பாடல் பாடும் போதே துடிதுடித்து பலியான சிங்கர் - அலறி அடித்து ஓடிய மக்கள்

தந்தி டிவி

சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜ், தனது நண்பர்களுடன் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேர்த் திருவிழாவுக்கு வந்துள்ளார். நள்ளிரவில் கடற்கரை அருகே அமர்ந்து நண்பர்களுடன் கானா பாட்டுப் பாடியபடி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அருகே அமர்ந்து கானா பாட்டு பாடி வந்த கும்பலுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஜெயராஜை அந்த கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெயராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என விசாரித்து வருகின்றனர்.

Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - சல்லடை போட்டு தேடப்படும் IPS அதிகாரியின் சகோதரர்

🔴LIVE : TNAssemblyLive | CM Vijay | DMK | 3 தமிழர்கள் சுட்டுக் கொலை - பேரவையில் வெடிக்கும் பூகம்பம்

Cauvery | Hogenakkal | பொங்கிவரும் காவிரி | ஒகேனக்கலில் தெரிந்த மாற்றம்

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு