சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மாணவர்கள் கஞ்சா பிடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். மாணவர்களின் காரை சோதனையிட்டதில் 30 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 90 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.