தமிழ்நாடு

பொறியியல் துணை கலந்தாய்வில் குளறுபடி : பலமணி நேரம் காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் உரிய வசதிகள் இல்லை என கூறி அதிகாரிகளுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காலை முதலே காத்திருந்தனர்.

ஆனால் இரவாகியும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நள்ளிரவிலும் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சர்வர் கோளாறு காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கைப் பணிகள் மதியம் முதலே தடைபட்டுள்ளதாகவும், கோளாறு உடனே சரிசெய்யப்பட்டு கலந்தாய்வைத் தொடங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி